search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலக தேவையில்லை - ஜெயராமன்
    X

    காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலக தேவையில்லை - ஜெயராமன்

    காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலக தேவையில்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையம் முன் அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது-

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழக உரிமையை காத்திட சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.

    ஜெயலலிதா வழியில் தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    எந்த ஒரு சூழ்நிலையிலும் மாநிலத்தின் உரிமையை விட்டு கொடுக்காமல் உள்ளனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை இன்று பல லட்சம் அ.தி.மு.க.வினர், பொதுமக்கள், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

    நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையும், கோட்பாடுகளும் அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் உள்ளது. இதனை சரியாக செய்து வருகிறார்கள்.

    ராஜினாமா செய்ய சொல்லும் கட்சிகளுக்கு பிரதிநிதிகள் இருந்தால் அவர்கள் ராஜினாமா செய்யட்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் பதவி விலக தேவையில்லை.தமிழக விவசாயிகளை காப்பாற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.

    இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். #tamilnews

    Next Story
    ×