search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தகவல் தெரிவிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
    X

    தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தகவல் தெரிவிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

    தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    சென்னை:

    தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை மீறி சில தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அரசு முறைப்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

    கூடுதல் கல்விக் கட்டணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ‘தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து கல்வி கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகள் 25 சதவீத ஒதுக்கீடு தராமல் இருந்தால் அந்த பள்ளிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறையின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.  #tamilnews


    Next Story
    ×