search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பில் மழை - பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நீர்பிடிப்பில் மழை - பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    கடந்த 2 மாதங்களாகவே பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாமல் பனியின் தாக்கம் அதிகரித்து வந்தது. அதன்பின்பு வெயில் சுட்டெரித்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

    இதனால் குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. விவசாயிகளும் கவலையில் இருந்தனர். மாலத்தீவு அருகே புயல் சின்னம் உருவானதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 100 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்டுகிறது. அணையின் நீர்மட்டம் 113.30 அடியாக உள்ளது.

    வைகை அணை பகுதியிலும் மழை பெய்துள்ளதால் அணைக்கு 51 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 32.32 அடியா உள்ளது.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 31.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாணை அணையின் நீர்மட்டம் 59.86 அடியா உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பெரியாறு 2.6, தேக்கடி 4.8, கூடலூர் 10, சண்முகாநதி அணை 8, உத்தமபாளையம் 9, வீரபாண்டி 9, வைகை அணை 15, மஞ்சளாறு 16, சோத்துப்பாறை 14, கொடைக்கானல் 31.6 மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மானாவாரி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×