search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்ச வழக்கில் கைதான துணை வேந்தர் ஜாமீன் கேட்டு மனு
    X

    லஞ்ச வழக்கில் கைதான துணை வேந்தர் ஜாமீன் கேட்டு மனு

    லஞ்ச வழக்கில் கைதான துணை வேந்தர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
    சென்னை:

    உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரின் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கணபதியை கடந்த 3-ந்தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணபதி, இரண்டு முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை கோவை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கணபதி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், இந்த வழக்கு எனக்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கு ஆகும். நான் யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை. கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் என்னை காவலில் எடுத்து விசாரித்து விட்டனர்.

    அந்த விசாரணையில் எனக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு விதிக்கும் எந்த ஒரு நிபந்தனையும் ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற மார்ச் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். #tamilnews

    Next Story
    ×