என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இணையதளத்தில் வலம்வரும் ஆறுகுட்டி எம்.எல்.ஏ-வின் ஜிமிக்கி கம்மல் நடனம்
Byமாலை மலர்25 Sep 2017 4:48 AM GMT (Updated: 25 Sep 2017 4:48 AM GMT)
இணையதளத்தில் வைரலாகும் ஜிமிக்கி கம்மல் நடனத்தோடு ஆறுகுட்டியின் நடனத்தையும் இணைத்து வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
சென்னை:
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மோகன்லால் மட்டும் தான் ஆடுவாரா? நம்ம ஊரு ஆறுகுட்டி எம்.எல்.ஏ.வும் தான் கலக்கலாக ஆடுகிறாரே என்று சொல்லும் அளவுக்கு ஜிமிக்கி கம்மல் நடனத்தோடு ஆறுகுட்டி எம்.எல்.ஏ. ஆடும் நடனத்தையும் இணைத்து வலைத்தளங்களில் பரவவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுகுட்டி இவர் நடனம் ஆடுவது புதிதல்ல. நடனம் ஆடுவது அவருக்கு தொழில். 1972-ல் ‘ஜமாப்’ என்ற கலைக்குழுவை தொடங்கினார். இந்த குழுவில் 150-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள்.
இந்த ஜமாப் குழுவினர் எந்த மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான நடனத்தை ஆடினார்கள். காலில் சலங்கை கட்டிக்கொண்டு மேள இசைக்கு ஏற்ப இவர்கள் ஆடும் நடனம் கலக்கலாக இருக்கும். கொங்குமண்டல கலாச்சார சாயலில் இருக்கும் இந்த நடனம் அந்த பகுதியில் பிரபலமாக உள்ளது.
குழுவை நடத்தி வரும் ஆறுகுட்டியும் காலில் சலங்கை கட்டி கலக்கலாக நடனம் ஆடுவார்.
அ.தி.மு.க. அனுதாபியான இவர் ஜெயலலிதா நிகழ்ச்சியில் தவறாமல் ஆடி விடுவார். பலமுறை அவரது ஆட்டத்தை ரசித்து கவனித்து வந்த ஜெயலலிதா யார் அந்த கலைஞர் என்று அழைத்து விசாரித்துள்ளார்.
அவரது நடனத்திறமையை பாராட்டி தான் அவருக்கு எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கியதாக நெகிழ்கிறார் ஆறுகுட்டி.
எம்.எல்.ஏ. ஆன பிறகும் ஆறுகுட்டி நடனம் ஆடுவது உண்டு. திருச்சி உள்பட சில தொகுதிகளுக்கு சென்று ஆடி இருக்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியிலும் அற்புதமாக ஆட்டம் போட்டார். பார்வையாளர்களை கவர்ந்த இந்த நடனம் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போது வலைத்தளங்களில் வைரலாகும் ஜிமிக்கி கம்மல் நடனத்தோடு ஆறுகுட்டியின் நடனத்தையும் இணைத்து வலைத் தளங்களில் பரவ விட்டுள்ளனர். தமிழக ஜிமிக்கி கம்மல் நடனமென்று ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.

Next Story
×