என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னையில் 2½ லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தேக்கம்
சென்னை:
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.
1 கோடியே 90 லட்சம் கார்டுகளில் இதுவரை 80 லட்சம் கார்டுகள் தயாராகி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. எழுத்து பிழை காரணமாக சரிபார்க்க வேண்டி உள்ளதால் மற்ற கார்டுகள் தயாரிக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகருக்கு 20 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இதில் 4 லட்சம் கார்டுகள் தயாராகி கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் 1½ லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2½ லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் ரேஷன் கடைகளில் தேங்கி கிடக்கிறது.
ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு செல்போனில் மெசேஜ் வந்து விடும். அதன்பிறகு 4 நாள் கழித்து ரேஷன் கடைக்கு சென்று கார்டை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல பேர் வேலைப்பளு காரணமாக வாங்க வரவில்லை என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு ரேஷன் கடை யிலும் 500 ஸ்மார்ட் கார்டு வரை தேங்கி கிடப்பதாக கூறுகின்றனர்.