search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வளர் இளம் பெண்களை தாக்கும் சிறுநீரகத் தொற்று
    X

    வளர் இளம் பெண்களை தாக்கும் சிறுநீரகத் தொற்று

    வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளில் சிறுநீரகத் தொற்று பெரும் பிரச்சனையாக உள்ளது. சிறுநீரகத் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.
    பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன்(urinary infection) எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.

    ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.

    பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல், முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.

    காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.
    Next Story
    ×