search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கிராமத்து ஸ்பெஷல் உப்புக்கறி
    X

    கிராமத்து ஸ்பெஷல் உப்புக்கறி

    ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ
    எண்ணெய் - 200 மில்லிகிராம்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    காய்ந்த மிளகாய் - 150 கிராம்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    தண்ணீர் - 150 மில்லி
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக்கறியை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும்.

    தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும்.

    சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும்.

    அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.

    சூப்பரான உப்புக்கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×