search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மட்டன் கீமா மொமோஸ் ரெடி
    X

    சூப்பரான மட்டன் கீமா மொமோஸ் ரெடி

    குழந்தைகளுக்கு மட்டன் கீமாவை வைத்து மொமோஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மொமோஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா அல்லது கோதுமை மாவு - 1 1/2 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    உள்ளே வைப்பதற்கு…


    மட்டன் கீமா - 250 கிராம்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்



    செய்முறை :

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் மைதா அல்லது கோதுமை, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.  

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வேக வைத்த கீமாவை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, பின் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி நன்கு தண்ணீர் வற்ற கிளறி விட்டு, இறக்கி வைக்க வேண்டும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு உருண்டை மாவை எடுத்து சிறு பூரி அளவில் தேய்த்து, நடுவே கீமா கலவையை சிறிது வைத்து, கூம்பு போன்று பிடித்து வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

    இட்லி தட்டில் எண்ணெயை தடவி, அதன் மேல் செய்து வைத்துள்ள மொமோஸ்களை வைக்க வேண்டும். இறுதியில் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூப்பரான மட்டன் கீமா மொமோஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×