search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்
    X

    சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்

    தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு

    வதக்கி அரைக்க:

    பூண்டு பல் - 10
    மிளகு - 2 டீஸ்பூன்

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலா, [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

    அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான நண்டு வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×