search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசை
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசை

    குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டில் தோசை மாவு, காய்கறிகளை பயன்படுத்தி பீட்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    மைதா - 1 கப்,
    கோதுமை மாவு - 1 கப்,
    அரிசி மாவு - 1 கப்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    ரவை - 1/4 கப்,
    தக்காளி - 2 கப்,
    வெங்காயம் - 2,
    குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    துருவிய சீஸ் - 1 கப்,
    உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்,
    வெண்ணெய் - சிறிது,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 டீஸ்பூன்,
    உருளைக்கிழங்கு - 250 கிராம்
    பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு பீட்சா தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×