search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்துக்கள் நிறைந்த அவகோடா டிப்
    X

    சத்துக்கள் நிறைந்த அவகோடா டிப்

    அவகோடாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சுவையானதும் மருத்துவ குணம் உடையதுமான அவகோடா டிப் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி ஆகும்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பூண்டு - ஒரு பல்
    அவகோடா - ஒன்று
    கொத்தமல்லித் தழை - சிறிது
    உப்பு - 2 சிட்டிகை
    எலுமிச்சைப் பழம் - பாதி



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அவகோடாவை இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் பகுதியை ஸ்பூனால் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    மசித்த அவகோடாவுடன் பொடியாக நறுக்கியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துவிட்டு உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து கொள்ளவும்.

    சிப்ஸுடன் பரிமாற, சுவையான அவகோடா டிப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×