search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நீரிழிவு நோயாளிகளுக்கான மிளகு சீரக தோசை
    X

    நீரிழிவு நோயாளிகளுக்கான மிளகு சீரக தோசை

    மிளகு, சீரகம் போட்டு செய்யும் இந்த தோசை நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை - அரை கப்,
    புழுங்கரிசி - அரை கப்,
    பச்சரிசி - அரை கப்,
    துவரம் பருப்பு - அரை கப்,
    கடலைபருப்பு - அரை கப்,
    வெந்தயம் - 2 தேக்கரண்டி,
    மிளகு - 2 தேக்கரண்டி,
    உப்பு - ருசிக்கேற்ப,
    சீரகம் - 2 தேக்கரண்டி,
    கறிவேப்பிலை - 2 கொத்து,
    தூள் பெருங்காயம் - அரை தேக்கரண்டி,
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    அரிசி, பருப்பு, வெந்தயம், கோதுமையை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்த பின் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும்

    தோசை வார்க்கும் முன்பு, தட்டி வைத்த சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மிளகு சீரக தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×