search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவுக்கு முன்னர் சூப் அருந்துவது நல்லதா?
    X

    உணவுக்கு முன்னர் சூப் அருந்துவது நல்லதா?

    நட்சத்திர ஹோட்டல்கள் முதல் தெருவோரக் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் சூப் வகைகளை சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து பார்க்கலாம்.
    உணவுக்கு முன்னர் சூப் குடித்தால், பசி தூண்டப்படும் என்று சொல்லப்படுவதும் ஒரு காரணம். வெதுவெதுப்பாக, இளஞ்சூட்டில் பரிமாறப்படும் சூப்பின் சுவைக்கு ஈடில்லை. நட்சத்திர ஹோட்டல்கள் முதல் தெருவோரக் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் சூப் வகைகளை உண்மையிலேயே சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிடுவது ஆரோக்கியமானதுதானா... நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்... ஒரு நல்ல சூப் எப்படி இருக்க வேண்டும்... என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * சூப்பிலிருந்து இதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஏராளம். காய்கறிகள் மட்டும் சேர்த்து சமைக்கப்படுவதில் ஒரு கப்பில், 50 முதல் 100 கலோரி கிடைக்கும். நன்கு காய்ச்சப்பட்ட காய்கறி சூப்பில், கார்போஹைட்ரேட் 15 கிராம்; நார்ச்சத்து 5 கிராம்; சர்க்கரை 3 கிராம் இருக்கும். சேர்த்துக்கொள்ளும் காய்கறியைப் பொறுத்து, வைட்டமின் சத்துகள் அமையும்.

    * உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதனால், இதயம் பாதுகாக்கப்படும். செரிமானத்தைச் சீராக்குவதால், மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    * இதை ஓரிரு கப் குடித்தால், பசி தூண்டப்படும். அதற்கும் அதிகமாகக் குடித்தால், வயிறு நிறைந்துவிடும். ஹோட்டல்களில் சாப்பாட்டுக்கு முன்னர் கப்களில் 'ஸ்டார்ட்டர்' கொடுப்பதற்கான காரணம் நம் பசியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உணவுக்குப் பதில் கொஞ்சம் அதிகமான அளவில் குடித்தால், வயிறு நிறைந்துவிடும். உடலுக்குத் தேவையான சத்து சூப்பில் இருப்பதால், சத்துக் குறைவுகள் எதுவும் ஏற்படாது.



    * காய்ச்சல் இருப்பவர்கள், தொண்டைப் பிரச்னை இருப்பவர்கள் சூடாக இதைக் குடித்தால் அதன் தீவிரம் குறையும்.

    சூப் அனைவருக்கும், அனைத்துச் சூழலுக்கும் ஏற்ற ஒன்று. அதில் சேர்க்கப்படும் பொருள்களைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும். ஒரு நல்ல சூப்பில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், காய்கறிகள் போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும். குளிர் காலங்களில் செய்தால், மசாலாப் பொருள்களைச் சற்று அதிகமாகவும், வெயில் காலம் என்றால் குறைவான மசாலாப் பொருள்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    இயற்கையாக காய்கறிகளைப் போட்டு செய்யப்படும் சூப்பில் கிடைக்கும் நன்மைகளைவிட மிகவும் குறைந்த அளவுதான் ரெடிமேட் வகைகளில் கிடைக்கும். குறிப்பிட்ட சில மாதங்களுக்குக் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பதப்படுத்தும் பல பொருள்கள் சேர்க்கப்பட்டு அந்த ரெடிமேட் மிக்ஸ் தயாரிக்கப்படுகிறது. அவை புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

    ரெடிமேட் சூப்பில், கார்ன் ஃப்ளார் (Corn flour) அதிகமாக இருக்கும் என்பதால், மேலும் மேலும் கொழுப்புகள் உடலில் சேர்ந்துகொண்டே இருக்கும். வழக்கத்துக்கு மாறாக பசி அதிகரித்து, அளவுக்கு மீறி உணவை உட்கொள்ள நேரிடும். இந்த கார்ன் ஃப்ளாரின் அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கும்.
    Next Story
    ×