search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடையில் சாப்பிட வேண்டிய உணவுகள்
    X

    கோடையில் சாப்பிட வேண்டிய உணவுகள்

    கோடையில் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள கீழ்கண்ட உணவுப் பொருட்களை அனைவரும் கண்டிப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    * மோர்: மிக அளவான உப்பு சேர்த்து ஓரிரு க்ளாஸ் மோர் அருந்துவது கோடையிலிருந்து உங்களை வெகுவாய் பாதுகாக்கும். இஞ்சி, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கறுவேப்பிலை சேர்த்து சுவையினையும், ஆரோக்கியத்தினையும் கூட்டிக் கொள்ளலாம்.

    * இதே போன்று தக்காளி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாமே.

    * செலவு என்று பாராமல் இளநீரினை எடுத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள சத்துகள், தாது உப்புகள் உங்களை சற்றும் சோர்வடையாது இருக்கச் செய்யும்.

    * வெள்ளரி: 95 சதவீத நீர் சத்து கொண்டது. இதனை பச்சையாகவோ ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பு சத்து இல்லாதது. குறைந்த கலோரி சத்து கொண்டது. ஸ்ட்ரெஸ் வெள்ளரி எடுத்துக் கொள்ளும் போதும் குறையும்.

    * கம்பு கூழ்: தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவில் கம்பு கூழும் பிரசித்தம். இரும்பு, கால்ஷியம், வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது. இதனைக் குடித்துத்தான் நம் முன்னோர்கள் ஏசி இல்லாமல் இயற்கையிலேயே குளு குளு வென்று இருந்தார்கள். நோய், வெய்யில் கொடுமை இவற்றிலிருந்து தப்பிக்க இவ்வகை உணவுகள் பெரிதாய் உதவும்.



    * கரும்பு சாறு: இதனை வாங்கும் பொழுது சுகாதாரமான தாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். கரும்பு சாறு, இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து தரப் படும் பொழுது சிறுநீர் பாதையில் ஏற்படும் பாதிப்பினை வெகுவாய் தவிர்த்து விடுகின்றது.

    * நொங்கு: இதனை ஐஸ் ஆப்பிள் என்பர் அந்த அளவு குளிர்ச்சியினை உடலுக்குத் தர வல்லது.

    * எலுமிச்சை-புதினா சாறு: இது உடலில் கட்டிகள், வேர்குரு தோன்றுவதை தவிர்க்கும்.

    * நன்னாரி: இதனை ‘சர்பத்’, என்ற முறையிலே எடுத்துக் கொண்டால் உடலை நீண்ட நேரம் ‘ஜில்’லென வைத்திருக்கும்.

    * இந்த காலத்தில் கிடைக்கும் மாங்காய், மாம்பழங்களை நன்றாக சாப்பிடுங்கள். அதிலும் மாம்பழம் அநேக சத்துகளைத் தன்னுள் கொண்டது.

    * நெல்லிக்காய்: இதனை சிறிதளவு ஜுசாகவே தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இத்தனை இருக்கும் பொழுது கோடை உங்களுக்கு ஊட்டி, கொடைக்கானல்தான்.
    Next Story
    ×