search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நுரையீரலை பாதுகாப்பதன் அவசியம்
    X

    நுரையீரலை பாதுகாப்பதன் அவசியம்

    நுரையீரலை பாதுகாப்பதன் மூலம் சுவாச கோளாறு சம்பந்தப்பட்ட நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்து வருவதும் நுரையீரலுக்கு நல்லது.
    நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதன் காரணமாக சுவாசிக்கும் காற்றில் மாசு கலப்பது நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணமாகிறது. இருமல், மூச்சு வாங்குதல், மூச்சுக்குழாயில் அலர்ஜி ஏற்படுதல், மூச்சுக்குழல்கள் சுருங்குதல், நெஞ்சுவலி, இருமும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை நுரையீரல் பாதிப்புகளுக்கான அறிகுறிகள்.

    தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுகள் காற்றில் கலப்பது காற்று மாசுபாட்டுக்கு வழி வகுத்து விடுகிறது. புகை பிடிப்பதும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதில் இருக்கும் நச்சுப்பொருட்கள் நுரையீரலில் படிந்து சுவாச பரிமாற்றத்திற்கு தடை ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக சிகரெட்டில் இருக்கும் நிகோடின் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவை குறைத்து கனிம பொருட்களின் அளவுகளில் மாற்றத்தை உருவாக்கி, ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது.



    அதனால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருந்து அதன் புகையை சுவாசிப்பவர்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தத்தில் சேர்ப்பதும், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை பிரித்தெடுத்து சுவாசத்தின் மூலம் வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணிகளாக இருப்பதால் அதன் நலனில் அக்கறை கொள்வது அவசியம்.

    நுரையீரலை பாதுகாப்பதன் மூலம் சுவாச கோளாறு சம்பந்தப்பட்ட நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும்போது மூக்கில் துணியை கட்டிக்கொண்டு செல்வது அவசியம். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்து வருவதும் நுரையீரலுக்கு நல்லது.
    Next Story
    ×