search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையை தூங்க வைக்க டிப்ஸ்
    X

    குழந்தையை தூங்க வைக்க டிப்ஸ்

    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

    குழந்தைகளின் உடல் மொழியை எப்படி புரிந்து கொள்வது?

    குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும்.

    தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும்.

    குழந்தைக்கு தூக்கம் வருவதை எப்படி கண்டறிவது?

    மூக்கு, கண்களை கைகளால் குழந்தை தேய்க்க ஆரம்பிக்கும். உட்காராமல் சாய்ந்து கொள்ளும். நடவடிக்கைகள் மெதுவாக காணப்படும். தூக்கம் வருவதன் அறிகுறியாக சில வித்தியாசமான ஒலிகளையும் எழுப்பலாம். கைகள் அல்லது ஏதாவது பொருளை சப்பத் தொடங்கும்.

    இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டவுடன் தொட்டலிலோ மெத்தையிலோ மடியிலோ போட்டு லேசாக தட்டி கொடுத்தால் போதும். குழந்தை தூங்கி விடும்.

    தூங்க வைக்க சில டிப்ஸ்

    இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

    வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

    குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம். சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

    மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும். குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம். 
    Next Story
    ×