search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்த போது எடுத்தபடம்.
    X
    கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்த போது எடுத்தபடம்.

    அகஸ்தீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம்

    கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் திருநாளான நேற்று காலை சுவாமி பச்சை கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வந்தனர். மேலும் பக்தர்களின் அங்கபிரதட்சணம், கும்பிடு நமஸ் காரம் ஆகியனவும் நடந்தது.

    முன்னதாக கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் நற்பணி மன்ற குழுவினரின் தேவாரம், திருவாசகம் பாட, பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் தீர்த்த குடம் கோவிலை வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மாலையில் அன்ன மண்டபத்தில் அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும், இரவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதிஉலாவும், தொடர்ந்து குமாரகோவில் தெருவில் அகஸ்தீஸ்வரருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சியும் நடந்தது. 
    Next Story
    ×