search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி
    X

    திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி

    திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவின் முக்கிய விழாவான ‘குட்டிக் குடிக்கும்’ நிகழ்ச்சி மற்றும் திருத்தேர் விழா நடந்தது.
    திருச்சி தென்னூரில் சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, பின்னர் கிராம தேவதையாக அமைய பெற்ற உக்கிரமாகாளியம்மன் மற்றும் சந்தன கருப்பு சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி காளிவட்டம் என்னும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சுத்தபூஜையும், அம்பாள் வீதியுலாவும் நடந்தது.

    முக்கிய விழாவான ‘குட்டிக் குடிக்கும்’ நிகழ்ச்சி மற்றும் திருத்தேர் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மருளாளி ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். ஏராளமான ஆட்டுக்குட்டிகள் குட்டிக்குடித்தலுக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர் மருளாளி அருள்வாக்கு கூறினார். பக்தர்கள் பலர் அருள்வாக்கு கேட்டனர். தொடர்ந்து அம்பாள் வீதியுலா நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது. நாளை(சனிக்கிழமை) சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 
    Next Story
    ×