search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளைதொடங்குகிறது
    X

    மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளைதொடங்குகிறது

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    இத்தனை சிறப்பு மிகுந்த இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதற்காக இன்று(வியாழக் கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் 6.45 கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்குகிறது. 21-ந்தேதி சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், 22-ந்தேதி பூதம், கமலம் வாகனத்திலும், 23-ந்தேதி கைலாசபர்வதம், அன்னம் வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    5-ம் நாளான 24-ந்தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் செட்டிப்பெண் மருத்துவம் என்ற ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு சுவாமி அம்பாள் ரிஷபவாகனத்தில் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    6-ம் நாள் நிகழ்ச்சியாக 25-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வருதல் நடைபெறுகிறது. தொடர்ந்து 26-ந்தேதி இரவு சுவாமி, அம்பாள் நந்திகேசுவரர், யாளி வாகனத்திலும், 27-ந்தேதி தங்க குதிரை, பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    9-ம் நாளான 28-ந்தேதி காலை சித்திரை தேர்திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேர் மலைக்கோட்டையை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் வலம் வரும். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×