search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது
    X

    வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது

    வாடிப்பட்டியில் உள்ள பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    வாடிப்பட்டி பேரூராட்சி 16-வது வாா்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோவிலின் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அம்மன் பச்சைநிற பட்டும், சுந்தரேசுவரா் வெண்பட்டும் உடுத்தியிருந்தனா். விக்னேஷ் பட்டா் தலைமையில் சிவராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிவாச்சாாியாா்கள் யாகசாலை பூஜை செய்து வேதபாராயணம் மந்திரம் முழங்க, திருக்கொடி காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டது. பின்பு கொடிமரத்திற்கு தீபாராதனை செய்யப்பட்டதும், சாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    இதையடுத்து தினமும் மாலை 6 மணிமுதல் 7.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. முதல் நாள் மீனாட்சி அலங்காரத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ராஜராஜேஸ்வாி, காமாட்சிஅம்மன், கனகதுா்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி, சிம்மவாகன ரூபிணி, மூகாம்பிகை ஆகிய அலங்காரங்களில் அம்மன் காட்சி அளிக்கிறார். திருவிழாவின் 11-ம் நாள் மாலை 6 மணிக்கு திருச்சீா் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் காலை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவமும், மாலை மாலை 6 மணிக்கு ஊஞ்சலாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. 13-ம் நாளன்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் நிறைவு நாளான 14-ம்நாள் சாந்த சொரூபிணி அலங்காரம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், குலசேகரன்கோட்டை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
    Next Story
    ×