search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இலந்தையடிதட்டு சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா 27-ந்தேதி நடக்கிறது
    X

    இலந்தையடிதட்டு சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா 27-ந்தேதி நடக்கிறது

    ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டு பகுதியில் தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டு பகுதியில் தென்காளஹஸ்தி சிவன் கோவில் உள்ளது. இங்கு ராகுவும், கேதுவும் ஒரே தலத்தில் அருள் பாலிக்கின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள திருமணதடை, குழந்தை பேறு இல்லாமை, உடல்நலக்கோளாறு, தொழில்தடை போன்ற பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்ய சிறந்த தலமாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், 1008 மந்திரங்களுடன் ராகு-கேது ஹோமம், பஜனை கச்சேரி போன்றவை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு காளஹஸ்தி சிவனுக்கும் பரிகார மூர்த்திகளான ராகு-கேதுவிற்கும் 21 வகையான அபிஷேகங்களும், நைவேத்தியங்களும் நடைபெறும். 12.30 மணிக்கு அலங்காரமும், தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனையும் நடைபெறும்.

    வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நேரில் வரமுடியாத பக்தர்கள், ‘தென்காளஹஸ்தி சிவாலய திருப்பணிக்குழு’ என்ற பெயரில் கேட்பு வரவோலை மற்றும் காசோலை அனுப்பி அர்ச்சனை மற்றும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிகமிட்டி மற்றும் தென்காளஹஸ்தி சிவன் கோவில் பக்தர்கள், சேவா சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×