search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மஹா வஜ்ரேஸ்வரி உகந்த மந்திரம்
    X

    மஹா வஜ்ரேஸ்வரி உகந்த மந்திரம்

    முன்வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிக்கும் மஹா வஜ்ரேஸ்வரிக்கு உகந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
    லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும், அதற்கருகில் வஜ்ரமயமான நதி ஒன்று உள்ளதென்றும், அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாச மகரிஷி தன் லலிதாஸ் தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள்.

    நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் பழம் தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

    மந்திரம்:

    ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
    வஜ்ர நித்யாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சஷ்டி, கிருஷ்ண பட்ச தசமி.

    பலன்: அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுதலை.
    Next Story
    ×