search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு - கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி விரதம்
    X

    ராகு - கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி விரதம்

    ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும். இந்த தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
    ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும்.

    இப்படிப்பட்ட சர்ப்பதோஷம் அமைந்த ஜாதகங்கள் சந்தோஷத்தை சந்திப்பது அரிதாக இருக்கும். அதுபோல் ஜாதகம் அமைந்தவர்களுக்கு திருமணத்தடை ஏற்படலாம். பிள்ளை பிறக்கவும் தடை ஏற்பட வழி உண்டு.

    அவர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு - கேது இருக்கும் இடத்தை நன்கு ஆராய்ந்து அது யார் காலில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய நட்புக்கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் படைத்து, மந்தாரை மலரை ராகு படத்திற்குச் சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.

    அதே போல் கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்துவித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபட வேண்டும். விரதம் இருந்து நாக கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளிதோறும் அல்லது பூஜிக்கும் தினத்தில் பாடி வழிபட்டால் சர்ப்பகிரகங்கள் சந்தோஷமான வாழ்வை வழங்கும்.

    அருகில் உள்ள நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவுக்கு நான்கு சுற்றும், கேதுவுக்கு ஏழு சுற்றும் வர வேண்டும். ஸ்ரீ விக்னேஸ்வரா என்றாலே சர்ப்பதோஷம் நீங்கி விடும்.

    கால சர்ப்ப தோஷத்தை போக்கும் சிறப்பான விநாயகர் தலங்களில் தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலம் தலமும் ஒன்றாகும். ஆயிரம் என்கிற எண்ணோடு சம்பந்தப்பட்ட விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று. இவர் 2300 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் என்றும் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்றும் கூறப்படுகிறது. பாண்டிய அரசனின் யாகத்திற்காக இந்த விநாயகர் நர்மதை நதிக்கரையிலிருந்து வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் என்றும் ஓர் வரலாறு உள்ளது.

    ஒருசமயம் ஒரு பணக்காரர் 1008 பேர்களுக்கு அன்னம்பாலித்தபோது எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தது. என்ன செய்வதென்று யோசித்த அவர் விநாயகரிடம் வேண்டிக் கொண்டார். உடனே விநாயகர் இளைஞனாக இத்தலத்தில் வந்த சலனத்தைப் போக்கி ஆயிரத்தெண் பிள்ளையார் ஆனார்.

    கேது கிரகத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்குவதால் ராகு கேது பரிகாரம் மற்றும் காலசர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம். அபிஷேகம் மற்றும் சதுர் தேங்காய் 108, 1008 விடப்பட்டு வழிப்படப்படுகிறது. மேலும் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் வீராசாமி, உச்சி மாகாளியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்கள் உள்ளன.

    திருச்செந்தூரில் அரங்கேறிய சுப்பிரமணிய புஜங்த்தை ஆதிசங்கரர் பாடியதற்கு முன் இந்த ஊரின் விநாயகர் மேல் கணேச பஞ்சரத்தினம் பாடியதாகத் தகவல். ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க கணேச பஞ்ச ரத்தினம் பாடியது இவரை வைத்துத் தான் என்றும் நம்பப்படுகிறது.
    Next Story
    ×