search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லட்சுமி விரதம் பற்றிய 40 தகவல்கள்
    X

    லட்சுமி விரதம் பற்றிய 40 தகவல்கள்

    லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
    1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    2. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

    3. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    4. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

    5. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

    6. நாளை காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

    7. மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.

    8. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

    9. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    10. இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறுமையும் தரும் இனிய விரதமாகும்.

    11. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

     12. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.

    13. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்றழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள்.

    14. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

    15. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.

    16. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.

    17. லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    18. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.

    19. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

    20. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.

    21. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    22. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன் படுத்தலாம்.

    23. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.

    24. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழிபடலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

    25. நடு நிலை தவறி உறவினர்களுக்கு அநீதி இழைத்து விட்டவர்கள், வரலட்சுமி விரதம் இருந்தால் அந்த பாவத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

    26. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.

    27. லட்சுமிவிரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் ஏழைகளை கடவுளாகவே பாவித்து நடந்து கொள்ள வேண்டும்.

    28. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் சொம்பு தாமிரச்சொம்பு அல்லது வெள்ளிச் சொம்பாக இருக்கலாம்.

    29. பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் லட்சுமியால் பொறுத்துக் கொள்ள இயலாது. எனவே பெரும்பாலான பெண்கள் லட்சுமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விரதத்தை மேற் கொள்கிறார்கள்.

    30. வரலட்சுமி பூஜை தினத்தன்று 3 தடவை அம்மனை வணங்கினால் நல்லது.

    21. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.

    32. சிலர் வரலட்சுமியை விதம், விதமான வாகனங்களில் அமரச்செய்து அலங்காரம் செய்வார்கள்.

    33. வரலட்சுமி பூஜைக்கு உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப தாம்பூலம் கொடுக்கலாம். ஆனால் உங்கள் விருந்தாளிகளிடம் நீங்கள் காட்டும் அன்பே முக்கியமானது.

    34. சித்ரநேமி என்ற கணதேவதை இந்த விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.

    35. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.

    36. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.

    37. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.

    38. இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்மணிகள் இவ்வுலகில் சகல போகங்களை அனுபவித்து பின் வைகுந்தம் சேருவார்கள்.

    39.வரலட்சுமி விரதம் மேற் கொள்ள நமது உள்ளத்துத் தூய்மையுடன் இல்லத்து தூய்மையும் மிகவும் அவசியம். எனவே விரதம் மேற் கொள்ள வீட்டை தூய்மைபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    40. வரலட்சுமி பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் கொண்டு அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.
    Next Story
    ×