search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜகாத் இஸ்லாத்தின் ஓர் தூண்
    X

    ஜகாத் இஸ்லாத்தின் ஓர் தூண்

    நான்காவது கடமையான ஜகாத் வசதி படைத்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஜகாத் அளிக்காவிட்டால் அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயத்தையும் உண்டாக்கியுள்ளான்.
    இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் நான்கு கடமைகள் ரமலான் மாதத்தில் அதிக அளவில் இறைவனை எண்ணும் வகையில் செயல்பட அடங்கி இருப்பதால் இம்மாதத்தை மிகச்சிறந்தமாதமாக கருதி முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். இது ஒரு புனித மாதம். இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் 1.கலிமா, 2. 5 வேளை தொழுகை, 3. நோன்பு, 4. ஜகாத், 5. ஹஜ் ஆகும். முதல் மூன்று கடமைகள் எல்லா இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்காவது கடமையான ஜகாத் வசதி படைத்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அதில் ஏழை, எளிய சொந்தக்காரர்களின் நலனிலும், ஏழைகள் மீதும் அக்கறை காட்டும் அளவுக்கு சமூக வளர்ச்சி செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டுள்ளான்.

    ஜகாத்தின் சிறப்புகள்

    இதன்மூலம் தன்வந்தர்களின் சொத்துக்கு பாதுகாப்பு அளித்துள்ளான். ஜகாத் கொடுப்பவரின் சொத்தை விரிவடையச்செய்தும், மனதிருப்தியும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அடையச்செய்துள்ளான். ஜகாத் அளிக்காவிட்டால் அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயத்தையும் உண்டாக்கியுள்ளான்.

    முக்கியத்துவம்

    ஜகாத்தின் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆனில் 82 இடங்களில் தொழுகைக்கு அடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது. ஜகாத் அளிக்காவிட்டால் அவரின் தொழுகை ஏற்கப்படுவது கடினம். ஜகாத் அளித்தவரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட காரணமாக அமைகின்றன.

    யார் மீது கடமை

    ஜகாத் ஒருவரின் சொத்தை பொறுத்து கணக்கிட வேண்டும். அவரின் வருமானத்தை பொறுத்து அல்ல. சொத்தின் மதிப்பு அவரிடம் ஒருவருடம் இருக்க வேண்டும். அதன்மதிப்பு அவரின் கடன்போக 52½ தோலா வெள்ளிக்கு குறைவாகவோ அல்லது தங்கம் 87½ கிராமுக்கு குறைவாகவோ அதன்மதிப்பு இருக்கக்கூடாது. இன்றைய தினம் அதன் மதிப்பு ரூ.2,05,000 ஆகும்.

    எதன்மீது ஜகாத் கிடையாது

    சொந்தத்திற்கான வீடு, கார், வீட்டு உபயோகத்திற்குரிய பொருட் கள், வாடகைக்கு எடுத்துள்ள சொத்து மீது ஜகாத் கிடையாது. தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, தாத்தா, பாட்டி, பாட்டன் ஆகியோர் ஜகாத் பெற தகுதி உடையவர்கள் கிடையாது.

    பெற தகுதி உடையோர்

    ஒருவரின் ஏழை, எளிய, சுற்றத்தார்கள், தன்மாநில, ஊரார், கடனில் சிக்குண்டவர்கள், தன்தொழிலாளர்கள், வழிபோக்கர் கள், அடிமைகளை விடுவிப்பவர்கள், ஜகாத் வசூலிப்பவர்களுக்கு அளிக் கலாம். பணமாகவும், நகையாகவும், நிலமாகவும், தானியமாகவும், கால் நடைகளாகவும், துணிகளாகவும் கொடுக்கலாம்.

    உரியவர்களுக்கே ஜகாத் அளித்து இன்று ஈத்பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். ஈத் முபாரக்

    பிர்தோஸ் கே.அஹமத், ஷபீக் ஷமீல் சமூக சேவை தலைவர், ஆம்பூர்.
    Next Story
    ×