search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை, பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன்
    X

    திருமண தடை, பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன்

    திருமண தடை, வேண்டுதல்கள் நிறைவேற ஆஞ்சநேயருக்கு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செய்து வந்தால் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.
    பிரார்த்தனை சீட்டு

    மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

    குங்குமப் பொட்டு 

    ஆஞ்சநேயருக்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். 

    வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இப்படி பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும். நினைத்தது நடக்கும்.

    அனுமனின் சிறப்பு

    அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதுதான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணா மூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவானையே ஒருமுறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழி வழிபடுவது சிறப்பு.

    முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

    நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் வித்தியாசமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.3 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முத்தங்கி அணிவித்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    Next Story
    ×