search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்
    X

    விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்

    நடிகர் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்துவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்ற விஜய் சேதுபதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். #VijaySethupathi #Sivakarthikeyan
    தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என்ற வரிசையில் தற்போது போட்டியில் இருப்பவர்கள் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்.

    இவர்களில் விஜய் சேதுபதி சில ஆண்டுகளிலேயே 25-வது படத்தை தொட்டுவிட்டார். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் ஒரு டிவியில் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் விஜய் சேதுபதிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருவது விஜய் சேதுபதிக்கே தெரியாதாம்.



    25 படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு வாழ்த்துச் சொல்ல சிவகார்த்தியேகன் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #VijaySethupathi #Sivakarthikeyan

    Next Story
    ×