search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்
    X

    அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்

    மதுரையை சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் புதிய போஸ்டர் ஒன்றை ஊர் முழுவதும் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். #Vijay
    சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் ஆகியோர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் கமல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார்.

    இவர்களை அடுத்து அரசியல் பேச்சில் அதிகம் அடிபடுபவர் நடிகர் விஜய். இதுவரை இவர் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்பது பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் இவரை சுற்றி இருக்கும் பலரும் விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசி வருகிறார்கள். அவரது ரசிகர்களும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேசுவார்கள்.



    தற்போது மதுரை விஜய் ரசிகர்கள் புதியதாக ஒரு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22. அன்றைய தினத்தில் முக்கிய முடிவு எடுக்கிறார் ஜோசப் விஜய். தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார். தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம். தமிழக மக்கள் மகிழ்ச்சி. அரசியல் கட்சிகள் அதிர்ச்சி என்று போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×