search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம் செய்த நடிகை கைது
    X

    ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம் செய்த நடிகை கைது

    பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வரும் ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய நடிகை கைது செய்யப்பட்டார். #SriReddy #MadhaviLatha
    தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது அரை நிர்வாணப் போராட்டம் காரணமாக தெலுங்கு திரைப்பட உலகம் அதிர்ச்சி அடைந்தது. தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீதும் அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், ''நடிகை ஸ்ரீரெட்டி தனது பிரச்சினை உண்மை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும், தொலைக்காட்சிகளில் இதுபோன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துவது சரியல்ல, தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது'' என கூறியிருந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி இதற்கு கண்டனம் தெரிவித்து திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு வருத்தப்படுகிறேன், அவரை சகோதரராக கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.

    அப்படிக் கூறியதுடன் நில்லாமல் காலில் இருந்த செருப்பைக் கழற்றி பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு செருப்பால் அடித்துக்கொள்கிறேன் என்று கன்னத்தில் செருப்பால் அடித்துக்கொண்டார், பின்னர் தவறான செய்கையையும் காண்பித்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் செருப்பால் அடித்துக்கொண்டதன் மூலம் மீண்டும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    பவன் கல்யாணை விமர்சித்ததால் அவரது ரசிகர்கள் டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ரீ ரெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர். ஸ்ரீ ரெட்டிக்கு ஏராளமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.



    இந்த நிலையில் நடிகை மாதவி லதா தலைமையில் பவன் கல்யாண் ரசிகர்கள் ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன் ஸ்ரீரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஸ்ரீரெட்டிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து செல்ல சொன்னார்கள். அவர்கள் மறுத்ததால் மாதவி லதா மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களை கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×