search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாரதிராஜாவுக்கு ரஜினி மன்றம் கண்டனம்
    X

    பாரதிராஜாவுக்கு ரஜினி மன்றம் கண்டனம்

    இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் மன்றம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். #Rajinikanth #BharathiRaja
    இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஈழத் தமிழர்களுக்காக ரஜினி குரல் கொடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில், வட சென்னை மாவட்ட தலைமை ரஜினி மன்ற செயலாளர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாரதிராஜா அவர்களே, இலங்கையில் தமிழர்களை கொன்று புதைத்த பொழுது ரஜினிகாந்த் என்ன செய்தார் என்று கேட்டு இருந்தீர்கள். அதற்கு உங்களுக்கு விளக்கம் அளிக்கிறோம்.

    1982-ம் ஆண்டு வட சென்னை மாவட்டம், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் அன்றைய தலைவர் நடராஜன், வட சென்னை மாவட்ட செயலாளரான நான் உள்பட அனைத்து ரஜினி ரசிகர்களும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் மெரினா கடற்கரையில் ஈழ தமிழர்களுக்காக அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை உண்ணாவிரதம் இருந்தோம். அதை முடித்து வைக்க ரஜினிகாந்த் வந்து பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார்.



    அப்பொழுது ரஜினிகாந்த் சிறப்புரை ஆற்றி இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தார். பகிரங்கமாக குரல் கொடுத்தார். பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லை என்றால் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள்.

    அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள், என்பதையும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    நல்லதை செய், நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×