search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எம்.ஜி.ஆர். - சிவாஜி பாராட்டில் வளர்ந்தேன் - சத்யராஜ் உருக்கம்
    X

    எம்.ஜி.ஆர். - சிவாஜி பாராட்டில் வளர்ந்தேன் - சத்யராஜ் உருக்கம்

    பாலு மகேந்திரா நூலகம் துவக்க விழாவில் பேசிய சத்யராஜ், எம்.ஜி.ஆர்., சிவாஜி பாராட்டில் தான் வளர்ந்தேன் என்று உருக்கமாக கூறினார். #Sathyaraj
    சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலு மகேந்திரா நூலகம் தொடங்கப்பட்டது. நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம், சுப்பிரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் இதை தொடங்கி வைத்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யராஜ் பேசும் போது,

    “நான் நடித்த ‘கடலோர கவிதைகள்’ படம் பார்த்து விட்டு சிவாஜி என்னிடம், “ அடுத்த 10 வருடங்களுக்கு உன்னை யாரும் அசைக்க முடியாது” என்றார். ‘வேதம்புதிது’ பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். என் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் பார்த்த பாலுமகேந்திரா என்னை கட்டிப் பிடித்து கண் கலங்கி பாராட்டினார். அவர்கள் பாராட்டு நான் வளரஉதவியது. அஜயன் பாலா எழுதிய ‘மர்லன் பிராண்டோ’ புத்தகத்தை படித்த பிறகு தான் மொழி தெரியாத படங்களிலும் நடிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். தெலுங்கு படங்களில் நடித்து சம்பாதிக்க தொடங்கினேன்.



    அதற்கு காரணமான அஜயன் பாலா தொடங்கிய இந்த நூலகத்துக்கு பெரிதாக உதவவேண்டும் என்று நினைக்கிறேன். விரைவில் அதை அறிவிப்பேன்” என்றார்.

    தொடர்ந்து வெற்றிமாறன், ராம், ஏ.எல்.விஜய், ரோகிணி உள்பட பலர் பேசினார்கள். 

    நிகழ்ச்சி முடிவில், ஜம்மு காஷ்மீரில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு சத்தியராஜ் கண்கள் கலங்க இரங்கல் தெரிவித்தார். அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #Sathyaraj
    Next Story
    ×