search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட நன்கொடையை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கிய விஷால்
    X

    நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட நன்கொடையை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கிய விஷால்

    நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் நன்கொடையை சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்குவதாக நடிகர் விஷால் தெரிவித்தார். #Vishal #FEFSI
    பிரபல இணையதளத்தின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேத்துபட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

    இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மொத்தமாக ரூ.10 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இதை நடிகர் கமல்ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பெற்று கொண்டார். பின்னர் அந்த தொகையை நடிகர் விஷால் அதே மேடையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் நன்கொடையாக வழங்கினார். 

    சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இந்த பணத்தை நன்கொடையாக வழங்குவதாக விஷால் தெரிவித்தார். #Vishal #FEFSI
    Next Story
    ×