search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஹன்சிகா விளம்பரப்படுத்த, வரலட்சுமி ஊக்கப்படுத்த களமிறங்குகிறார் விஷ்ணு விஷால்
    X

    ஹன்சிகா விளம்பரப்படுத்த, வரலட்சுமி ஊக்கப்படுத்த களமிறங்குகிறார் விஷ்ணு விஷால்

    ஹன்சிகா விளம்பரப்படுத்த, வரலட்சுமி ஊக்கப்படுத்த நட்சத்திர பேட்மின்டன் போட்டியில் கேப்டனாக களமிறங்க இருக்கிறார் விஷ்ணு விஷால்.
    நட்சத்திர கிரிக்கெட் போட்டி போன்று, நட்சத்திர பேட்மின்டன் போட்டி, ‘செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்’ என்ற பெயரில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த இந்த போட்டி, இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி முதல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

    இதில், நட்சத்திர பேட்மின்டன் அணிகளான தமிழ் ராக்கர்ஸ், கேரளா ராயல்ஸ், கர்நாடக வாரியர்ஸ் அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழ் ராக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் விஷ்ணுவிஷால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். துணை கேப்டனாக கிருஷ்ணா தேர்வாகி இருக்கிறார். இந்த அணியில் நடிகர்கள் விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் காயத்ரி, சுஜாவாருணி, ஜனனி அய்யர், மிஷா கோ‌ஷல் ஆகியோர் ஆடுகிறார்கள்.

    கோகுல் பைனான்ஸ் பைஜூ கோபாலன் உரிமையாளராக இருக்கும் இந்த அணியின் தூதராக ஹன்சிகா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஊக்கப்படுத்துபவராக வரலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×