என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எனது வரலாறில் முக்கிய இடத்தை பிடித்த படம் `விக்ரம் வேதா' - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Byமாலை மலர்15 Dec 2017 3:30 AM GMT (Updated: 15 Dec 2017 3:30 AM GMT)
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' படம் எனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.
விஜய் சேதுபதி - மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் - காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விஜய் சேதுபதி பேசும் போது,
எனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா'. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும் என்றார்.
விக்ரம் வேதா 100 நாள் கொண்டாட்டம் விக்ரம் வேதா மாதவன் விஜய் சேதுபதி விக்ரம் வேதா புஷ்கர் காயத்ரி வரலட்சுமி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதிர் பிரேம் குமார் மஸ்தோ ராஜ்குமார் Madhavan Vijay Sethupathi Vikram Vedha Pushkar Gayatri Varalakshmi Shraddha Srinath Vikram Vedha prem kumar mastha rajkumar vikram vedha 100 day celebration
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X