என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் உதயநிதி
Byமாலை மலர்12 Dec 2017 4:50 PM GMT (Updated: 12 Dec 2017 4:50 PM GMT)
இப்படை வெல்லும் படத்தை அடுத்து, தான் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை நாளை வெளியிட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி நடிப்பில் இறுதியாக ‘இப்படை வெல்லும்’ படம் வெளியானது. கவுரவ் இயக்கிய இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். மேலும் சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதில் இவருடன் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் 'மகேஷ்'. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
தற்போது மும்முரமாக நிமிர் படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை நாளை வெளியிட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த அறிவிப்பை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கிறார்கள்.
Next Story
×