search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அரசியல் புதுவரவு பட்டியலில் அஜித் பெயரை ஏன் சேர்க்கவில்லை - ஆரி ஆதங்கம்
    X

    அரசியல் புதுவரவு பட்டியலில் அஜித் பெயரை ஏன் சேர்க்கவில்லை - ஆரி ஆதங்கம்

    தமிழ்நாட்டு அரசியல் புதுவரவு பட்டியலில் ரஜினி, கமல் வரிசையில் ஏன் அஜித் பெயரை சேர்க்கவில்லை என்று நடிகர் ஆரி, விசிறி பட விழாவில் பேசியுள்ளார்.
    வெண்நிலா வீடு படம் மூலம் இயக்குனராக அறிமுக வெற்றி மகாலிங்கம், தற்போது ‘விசிறி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ராஜ் சூர்யா, ராம் சரவணா ஆகியோர் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். ரிமோனா ஸ்டெப்னி கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் கிரண் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் இசையமைத்துள்ளனர்.

    இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார், பாடலாசிரியர் மதன்கார்க்கி, நடிகர் ஆரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    இதில் நடிகர் ஆரி பேசும்போது, ‘விசிறி திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ்நாட்டு அரசியல் பட்டியலில் அஜித்தை இன்னும் சேர்க்கவே இல்லை. வரமாட்டார். ஆனால், வருவதற்கு முன்னால், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்தை வரைந்து, என்னென்ன விஷயத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும், வெளிநாடு போன்று தமிழகத்தை எப்படியெல்லாம் மாற்றலாம் என்று ஒர்க் செய்து வைத்திருக்கிறார் என்று அஜித்தின் நெருங்கியவர்கள் என்னிடம் கூறினார்கள். இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், நான் சொல்லிவிட்டேன்’ என்றார்.
    Next Story
    ×