search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
    X

    நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து

    பிரபல தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்பு அரங்குகள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தன.
    நடிகை சமந்தாவின் மாமனாரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அன்னபூர்ணா என்ற பெயரில் ஸ்டுடியோ உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஸ்டுடியோவை நாகார்ஜுனாவின் தந்தையும் நடிகருமான நாகேஸ்வரராவ் உருவாக்கினார்.

    அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தினமும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா படப்பிடிப்புகள், டெலிவிஷன் தொடர் படப்பிடிப்புகள், டெலிவிஷன் ரியாலிட்டி ஷோக்கள் போன்றவை நடந்து வந்தன. இந்த ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு போடப்பட்டு இருந்த 2 படங்களின் படப்பிடிப்பு அரங்குகள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தன.

    தீ விபத்து ஏற்பட்டபோது அரங்குக்குள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
    Next Story
    ×