search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சந்தானம் படத்துக்கு 5 நடன இயக்குனர்கள்
    X

    சந்தானம் படத்துக்கு 5 நடன இயக்குனர்கள்

    சந்தானம் நடித்து வரும் ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு 5 நடன இயக்குனர்கள் நடனம் அமைத்திருக்கிறார்கள்.
    விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்கபோடு போடுராஜா’. இதில் விவேக், சம்பத்ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனாசிங் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் எஸ்.டி.ஆர். இசையில் யுவன் சங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடி உள்ளனர். ரோகேஷ் எழுதிய ‘கலக்கு மச்சான்..’ என்ற பாடலை அனிருத் பாடி இருக்கிறார்.

    சமீபத்தில் இந்த படத்துக்காக, சந்தானத்தின் அறிமுக பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் முதல் முறையாக பிரபல நடன இயக்குனர்களான ராஜூசுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி என 5 பேர் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இதன் டிரைலரை நாளை வெளியிட இருக்கிறார்கள்.
    Next Story
    ×