என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தீபாவளி தினத்தை ஸ்கெட்ச் போட்ட விக்ரம்
Byமாலை மலர்22 Sep 2017 4:54 PM GMT (Updated: 22 Sep 2017 4:54 PM GMT)
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `ஸ்கெட்ச்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்'. வடசென்னை பின்னணியில் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் என்று காத்திருக்கும் நிலையில், தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விக்ரம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ள `ஸ்கெட்ச்' படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
×