என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`இறுதிச்சுற்று' திரைப்படத்திற்கு கிடைத்த புதிய கவுரவம்
Byமாலை மலர்8 Sep 2017 6:46 AM GMT (Updated: 8 Sep 2017 6:46 AM GMT)
சுதா கொங்காரா இயக்கத்தில் மாதவன் - ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `இறுதிச்சுற்று' திரைப்படத்திற்கு புதிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.
புதுவை அரசின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக நடிகர் மாதவன் நடித்த `இறுதிச்சுற்று' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மற்றும் இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு புதுவை அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடக்கிறது.
புதுவை அரசின் செய்தி விளம்பர துறை, நவதர்ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து நடத்தும் திரைப் பட விழா இன்று தொடங்கி 12-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
திரைப்பட விழாவை முதல்-அமைச்சர் நாராயண சாமி தொடங்கி வைத்து `இறுதிச்சுற்று' திரைப்பட இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை வழங்குகிறார்.
விழாவில் முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. செய்தி விளம்பர துறை செயலாளர் பார்த்திபன், நவதர்ஷன் திரைப்பட கழக செயலாளர் பழனி, அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் லலித் வர்மா ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
விழாவை தொடர்ந்து `இறுதிச்சுற்று' திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் இலவசமாக பொதுமக்கள் பார்க்க திரைப்படம் திரையிடப்படுகிறது.
நாளை (சனிக்கிழமை) சித்ரோகர் பெங்காலி திரைப்படமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காடு பூக்குன்ன நேரம் மலையாள படமும், 11-ந் தேதி ஏர்லிப்ட் இந்தி படமும், 12-ந் தேதி யூ-டர்ன் கன்னட திரைப்படமும் திரையிடப்படுகிறது.

Next Story
×