search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் டொயோட்டா ப்ராடோ வெளியானது
    X

    இந்தியாவில் டொயோட்டா ப்ராடோ வெளியானது

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் லிமிட்டெட் இந்தியாவில் ப்ராடோ ஆடம்பர எஸ்.யு.வி. மாடலை வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் லேண்ட்க்ரூசர் ப்ராடோ ஆடம்பர எல்.யு.வி. மாடலை வெளியிட்டுள்ளது. புதிய ஆடம்பர எஸ்.யு.வி. சாலிட்டரி VxL என அழைக்கப்படுகிறது.

    2018 லேண்ட்க்ரூசர் ப்ராடோ மாடலில் முற்றிலும் புதிய முகம், மேம்படுத்தப்பட்ட இன்டீரியர்கள் வழங்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த லேண்ட்க்ரூசர் மாடலை விட அதிக சக்திவாய்ந்ததோடு, ஃபார்ச்சூனர் மாடலை விட பெரியதாக இருக்கிறது. புதிய ப்ராடோ மாடலில் 3-லிட்டர் D-4D டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    முந்தைய ஃபார்ச்சூனர் மாடலை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கிறது. இந்த இன்ஜின் 171 பி.ஹெச்.பி. பவர், 410 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், ஃபாக் லேம்ப், மூன்ரூஃப், டிரை-சோன் கிளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் 9 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை அடாப்டிவ் வேரியபிள் சஸ்பென்ஷன், மல்டி-டெரைன் ABS, 7 ஏர்பேக்-கள், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், முன்பக்கம் ஆக்டிவ் ஹெட்ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எட்டு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் ப்ராடோ எஸ்.யு.வி. இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் லேண்ட்க்ரூசர் ப்ராடோ எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாய் உருவாக்கப்பட்ட ஆடம்பர எஸ்.யு.வி. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதே அதிக விலைக்கான காரணமாக கூறப்படுகிறது.
    Next Story
    ×