search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    அதிக பாதுகாப்புடன் விரைவில் வெளியாகும் மஹேந்திரா எஸ்.யு.வி
    X

    அதிக பாதுகாப்புடன் விரைவில் வெளியாகும் மஹேந்திரா எஸ்.யு.வி

    மஹேந்திரா நிறுவனத்தின் பொலேரோ எஸ்.யு.வி. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் வெளியாக இருக்கிறது.
    புதுடெல்லி:

    மஹேந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலான பொலேரோ விரைவில் புதிய அப்டேட் பெற இருக்கிறது. ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த புதிய பொலேரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

    மத்திய அரசின் வாகன பாதுகாப்பு மதிப்பீடு திட்டத்தின் கீழ் புதிய பொலேரோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2019 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். 

    அந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் அனைத்து கார்களிலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ், சீட்பெல்ட் வார்னிங் லைட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை அடிப்படை அம்சங்கள் ஆகிறது. 

    மஹேந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் கூறும் போது, 'பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏர்பேக் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படாத ஒற்றை மஹேந்திரா வாகனமாக பொலேரோ இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம், தற்சமயம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இது இருக்கிறது, மேலும் 2019 ஜூலைக்குள் இதனை முடிக்க வேண்டும்,' என அவர் தெரிவித்துள்ளார்.



    தற்சமயம் விற்பனை செய்யப்படும் பொலேரோவில் ஏர்பேக், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் மட்டுமே வழங்கப்படாமல் உள்ளது. இவை வழங்கப்பட்டதும் பொலேரோ அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மல்டி யூடில்லிட்டி வாகனமாக இருக்கும். ஊரக பகுதிகளில் பிரபலமான மாடலாக இருக்கும் பொலேரோ புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தியாவின் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய மாடலில் சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோ, கீலெஸ் எண்ட்ரி, சென்டர் ஆம்ரெஸ்ட் உள்ளிட்டவை இரண்டாம் அடுக்கு இருக்கைகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் ப்ளூடூத் வசதி கொண்ட எம்.பி.3 பிளேயர், ஓட்டுநர் வசதி கொண்ட டிஸ்ப்ளே, மரத்தாலான சென்ட்ரல் பெசல், ரியர் வாஷர் மற்றும் வைப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த அம்சங்களுடன் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவை பாதுகாப்பான மல்டி யூடிலிட்டி வாகனமாக (MUV) மாற்றிவிடும்.

    மஹேந்திரா பொலேரோ மாடல் 4-மீட்டர் பவர் பிளஸ், மற்றும் ஸ்டான்டர்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த மாடல் எம்ஹாக் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் m2DiCR 2.5 லிட்டர் டீசல் யூனிட் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் இன்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர், 195 என்.எம். டார்கியூ செயல்திறன், 2.5 லிட்டர் யூனிட் 63 பி.ஹெச்.பி. பவர், 180 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
    Next Story
    ×