search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 யமஹா FZ Fi v3 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்
    X

    2019 யமஹா FZ Fi v3 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

    யமஹா நிறுவனத்தின் 2019 FZ Fi v3 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #Yamaha #Motorcycle



    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் 2019 FZ Fi v3 மோட்டார்சைக்கிள் அறிமுகமானது. புதிய FZ Fi v3 விலை ரூ.95,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யமஹா FZ-S Fi மோட்டார்சைக்கிள் விலை ரூ.97,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இரு மோட்டார்சைக்கிள்களிலும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 149சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 4-ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின்களில் புதிதாக சப்-ஃபிரேம், புதிய என்ஜின் செட்டிங்கள், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., பின்புறம் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.



    2019 மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. ஹெட்லைட் தனியாக வழங்கப்பட்டுள்ளது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட அதிக வெளிச்சத்தை வழங்குகிறது. மேலும் ஃபியூயல் டேன்க் முந்தைய மாடலை விட பெரியதாக இருக்கிறது. இவற்றுடன் ஒற்றை சீட், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் எக்சாஸ்ட் கேன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய மாடலை விட சிறப்பான கண்ட்ரோல் வழங்கும் நோக்கில் பின்புறம் புதிதாக சப்-ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹேன்டிள்-பார் சற்றே உயர்த்தப்பட்டு இருப்பதால், நீண்ட தூர பயணங்களை இலகுவாக மேற்கொள்ளலாம். 

    யமஹா 2019 FZ Fi v3 மோட்டார்சைக்கிளில் வழங்கியிருக்கும் 149சிசி என்ஜின் இம்முறை 13.2 பி.எஸ். பவர் @8000 ஆர்.பி.எம் மற்றும் 12.8 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    Next Story
    ×