search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மெக்சிகோவில் கிளை விரிக்கும் டி.வி.எஸ்.
    X

    மெக்சிகோவில் கிளை விரிக்கும் டி.வி.எஸ்.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் மெக்சிகோவில் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்கென அந்நிறுவனம் டொரினோ மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தமிட்டுள்ளது. #TVS



    தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் டி.வி.எஸ். ஆகும். இக்குழும நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ். மோட்டார்ஸ் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், ஆட்டோ இவற்றை தயாரிக்கிறது. இந்நிறுவனத்துக்கு உற்பத்தி ஆலைகள் ஓசூர் மற்றும் மைசூருவில் உள்ளன. 

    இந்நிறுவனம் மோட்டார் சைக்கிள் விற்பனையில் இன்றளவும் மிகச் சிறப்பான பெயருடன் தனக்கென வாடிக்கையாளர்களை இந்தியா முழுவதும் கொண்டுள்ளது. இப்போது மெக்சிகோவிலும் தனது விற்பனையைத் தொடங்க டி.வி.எஸ். முடிவு செய்துள்ளது. இதற்காக மெக்சிகோவில் உள்ள டொரினோ மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் குரூப்போ ஆட்டோபின் எனும் குழும நிறுவனத்தின் அங்கமாகும்.

    இதன் மூலம் மெக்சிகோவில் டி.வி.எஸ். தயாரிப்புகள் விற்பனை செய்யும் அங்கீகாரம் பெற்ற டீலராக டொரினோ மோட்டார்ஸ் திகழும். முதலாண்டில் டொரினோ மோட்டார்ஸுடன் சேர்ந்து மத்திய அமெரிக்க நாடுகளில் 40 டீலர்களை டி.வி.எஸ்ஸூடன் இணைந்து டொரினோ மோட்டார்ஸ் அமைக்கும்.

    இங்கு டி.வி.எஸ். அபாச்சியின் அனைத்து மாடல்கள், டி.வி.எஸ். ஸ்டிரைக்கர், டி.வி.எஸ். ராக்ஸ் மற்றும் நியோ மாடல் ஸ்கூட்டரெட் (ஸ்டெப் த்ரூ), டி.வி.எஸ். என்டார்க் 125, வெகோ ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும்.

    இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது அபாச்சி. இது கடந்த மாதம்தான் 30 லட்சம் இலக்கைத் தொட்டது. மெக்சிகோவில் கிளை பரப்பியதன் மூலம் இந்நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை வளர்ச்சி அபரி மிதமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    40 ஆண்டுகளாக மெக்சிகோவில் மிகவும் புகழ்பெற்றுத் திகழும் டொரினோ மோட்டார்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலமாக டி.வி.எஸ். தயாரிப்புகள் மெக்சிகோவில் கிடைக்கும். இதன் மூலம் இந்நிறுவனத் தயாரிப்புகள் விற்பனை அதிகரிக்கும்.

    டி.வி.எஸ். தயாரிப்புகள் ஏற்கனவே 60 நாடுகளில் விற்பனையாகின்றன. இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் திகழ்கிறது.
    Next Story
    ×