search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் அமோக வரவேற்பை பெறும் ஹோன்டா கிரேசியா
    X

    இந்தியாவில் அமோக வரவேற்பை பெறும் ஹோன்டா கிரேசியா

    ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த 125சிசி ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த 125சிசி ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் மாடலான கிரேசியா இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

    ஹோன்டா கிரேசியா இந்திய விற்பனை துவங்கிய ஐந்தே மாதங்களில் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை கடந்திருக்கிறது. இந்தியாவில் நவம்பர் 8, 2017-இல் அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா கிரேசியா புதிய வடிவமைப்பு, மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது.

    ஹோன்டா ஆக்டிவா 125 மாடலில் வழங்கப்பட்ட 124.99சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் புதிய ஹோன்டா கிரேசியா மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.52bhp @ 6,500rpm மற்றும் 10.54Nm டார்கியூ @5000rpm செயல்திறன் கொண்டுள்ளது. இந்ச இன்ஜினுடன் ஆட்டோமேட்டெட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கிரேசியா ஸ்கூட்டர் 1812 மில்லிமீட்டர் நீலமும், 697 மில்லிமீட்டர் அகலமாகவும், 1,146 மி்ல்லவிமீட்டர் உயரத்தில் 1260 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. தரையில் இருந்து 766 மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இதன் ஃபியூயல் டேன்க் 5.3 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய கிரேசியா ஸ்கூட்டரின் முன்பக்கம் 12 இன்ச் அலாய் வீல், பின்புறம் 10 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீல்களில் 90/90-12 மற்றும் 90/90-10 டையர்கள் கொண்டுள்ளது. இதன் உயர் ரக மாடலின் முன்பக்கம் 190 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், நடுத்தர மாடலில் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 130 மில்லிமீட்டர் யுனிட் மற்றும் ஹோன்டாவின் காம்பி-பிரேக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 

    ஹோன்டாவின் பிரபல டியோ மாடலை தழுவி புதிய கிரேசியா வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க அப்ரானில் டுவின்-பாட் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகையான அம்சம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஹெட்லைட்டின் மேல் பெரிய இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கிரேசியா ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் - 3-ஸ்டெப் இகோ ஸ்பீடு இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெற்ற முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையையும் கிரேசியா பெற்றுள்ளது.
    Next Story
    ×