என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honda Motorcycle"

    • வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரிய அளவிலான வரவேற்பு இல்லாததால் நடவடிக்கை.
    • CD 110 Dream பைக் சுமார் ரூ.42,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் CD 110 Dream பைக் உற்பத்தியை இந்தியாவில் நிறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், இந்த மாடல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

    2014-ல் அறிமுகமான CD 110 Dream, 11 ஆண்டுகளாக இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் மலிவு விலையில் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருந்தது.

    இந்த மாடல் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணங்களாக, விற்பனை குறைவு மற்றும் 2023-ல் அறிமுகமான Honda Shine 100 போன்ற நவீன மாடல் பைக்குகளின் வரவு என கருதப்படுகிறது.

    SIAM தரவுகளின்படி, 2025 பிப்ரவரியில் ஒரே ஒரு CD 110 Dream மட்டுமே விற்பனையாகியதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் 33 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின, மற்றும் ஏப்ரல் 2025-ல் விற்பனை பூஜ்ஜியமாக இருந்துள்ளது.

    குறைந்த விற்பனை எண்ணிக்கை CD 110 Dream மாடலை நிறுத்துவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    ஹோண்டா CD 110 Dream 109.51சிசி ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது. இது முறையே 8.79 ஹெச்பி மற்றும் 9.30 என்எம் உச்ச சக்தி மற்றும் முறுக்குவிசை வெளியீட்டை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

    மேலும், உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க மோட்டார் சைக்கிள் பல முறை புதுப்பிக்கப்பட்டது. இந்த பைக் சுமார் ரூ.42,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது அப்போது நாட்டின் மிகவும் மலிவு விலை பைக்காக அமைந்தது.

    இருப்பினும், கடந்த 2023ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா ஷைன் 100 ஐ பைக், இதன் நவீன தோற்றம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது. இது வாடிக்கையாளர்களிடையே சிடி 110 டிரீம் பைக் வாங்குவதற்கான ஆர்வத்தை குறைத்துள்ளது.

    இதுகுறித்து கூறிய ஹோண்டா இந்தியாவின் தலைவர், "CD 110 Dream பைக், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை" என ஒப்புக்கொண்டதுடன், "விரைவில் புதிய குறைந்த விலை மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளதாக" தெரிவித்துள்ளார்.

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #HondaXBlade



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிள் ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் காட்சிக்கு வைக்கப்படு பின் மார்ச் 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் இந்த மோட்டார்சைக்கிள் அமோக வரவேற்பை பெற்றிருந்த போதும், 2018 ஆண்டின் இறுதி காலாண்டில் இதன் விற்பனை சரிய துவங்கியது.



    விற்பனை சரிவுக்கான காரணத்தை ஆய்வு செய்த ஹோன்டா நிறுவனம் மோட்டார்சைக்கிளின் நிறம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை கண்டறிந்துள்ளது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற 162சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14 பி.ஹெச்.பி. பவர், 13.9 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

    இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படும். ஹோன்டா எக்ஸ் பிளேடு விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.81,668 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் CB300R மோட்டார்சைக்கிளை இரண்டே மாதங்களில் 500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. #HondaCB300R



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஹோன்டா CB300R விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமான இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளை இரண்டே மாதங்களில் சுமார் 500-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மோட்டார்சைக்கிள்கள் விற்று தீர்ந்திருந்தாலும், இவற்றுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறும் என ஹோன்டா அறிவித்துள்ளது.



    புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது.

    இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.

    சமீபத்தில் ஹோன்டா CB300R இந்திய விநியோகம் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள்கள் டெல்லி, சண்டிகர், ஜெய்பூர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட இடங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு செய்வோர் மூன்று மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    ஏ.பி.எஸ். வசதி கொண்ட 2019 ஹோன்டா சி.பி. யுனிகான் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #CBUnicorn150ABS



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சி.பி. யுனிகான் 150 மோட்டார்சைக்கிளை ஏ.பி.எஸ். வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய சி.பி. யுனிகான் 150 ஏ.பி.எஸ். விலை ரூ.78,815 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிகான் ஏ.பி.எஸ். வேரியண்ட் விலை ஸ்டான்டர்டு மாடலை விட ரூ.6,500 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹோன்டா யுனிகான் 150 மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 150 சிசி பிரிவில் ஹோன்டா சி.பி. யுனிகான் பிரபல மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. எளிய வடிவமைப்பு கொண்டிருக்கும் யுனிகான் விற்பனை நிறுத்தப்பட்டு யுனிகான் 160 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. 



    எனினும், அதிகளவு பிரபலமாக இருந்ததோடு, தட்டுப்பாடு ஏற்பட்டதால் மீண்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. தோற்றத்தின் படி ஏ.பி.எஸ். வேரியண்ட்டில் சிறிய ஏ.பி.எஸ். ஸ்டிக்கர்கள் முன்பக்க மட்கார்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதுதவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்திய சந்தையில் ஹோன்டா யுனிகான் தொடர்ந்து கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. புதிய ஏ.பி.எஸ். வேரியண்ட் சில்வர், பிளாக் மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹோன்டா சி.பி. யுனிகான் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளில் 150சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.73 பி.ஹெச்.பி. பவர், 12.8 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இத்துடன் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டிருக்கிறது.

    அதிகளவு பிரபலமாக இருப்பதால் ஏப்ரல் 1, 2019 வரை ஏ.பி.எஸ். இல்லாத மாடல் ஏ.பி.எஸ். மாடலுடன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2018 ஏவியேட்டர் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டர் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda


    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2018 ஏவியேட்டர் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா ஏவியேட்டர் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பொசிஷன் லேம்ப்கள், 4-இன்-1 லாக், சீட் ஓப்பனர் ஸ்விட்ச், மஃப்ளர் ப்ரோடெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    2018 ஹோன்டா ஏவியேட்டர் மாடல் பியல் ஸ்பார்டன் ரெட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. முன்னதாக பியல் இக்னியஸ் பிளாக், மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் பியல் அமேசிங் வைட் என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஏவியேட்டர் ஸ்கூட்டரில் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதே இன்ஜின் முந்தைய ஏவியேட்டர் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

    இதன் சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ-ஷாக் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் முறையே முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சத்தை பொருத்த வரை 2018 ஏவியேட்டர் மாடலில் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் இரண்டு சக்கரங்களில் வழங்கப்படுகிறது. 



    இத்துடன் முன்புறம் 190மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதனுடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் ஹோன்டா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா i மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஹோன்டா ஆக்டிவா i தற்போதைய மாடலை விட மெல்லியதாக காட்சியளிக்கிறது.

    இந்தியாவில் 2018 ஏவியேட்டர் மாடலின் துவக்க விலை ரூ.55,157 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Honda #scooters
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2018 சிடி 110 டிரீம் டி.எக்ஸ். மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் புதிய 2018 சிடி 100 டிரீம் டி.எக்ஸ். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய 2018 சிடி 110 டிரீம் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டுள்ளது.

    2018 ஹோன்டா சிடி 110 டிரீம் டி.எக்ஸ். மாடலில் புதிய தங்க நிற கிராஃபிக்ஸ் மற்றும் க்ரோம் மஃப்ளர் ப்ரோடெக்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் ஹெவி-டியூட்டி கேரியர், நீண்ட இருக்கை, வீல்பேஸ் உள்ளிட்டவை சவுகரிய அனுபவத்தை வழங்கும் படி இருக்கிறது.

    புதிய 2018 மாடலில் 110சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்ட், HET இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.31 பி.ஹெச்.பி. பவர் 9.09 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்குகிறது. இந்த இன்ஜின் சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் வழங்குகிறது.



    சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கள், பின்புறம் ஸ்ப்ரிங் ஹைட்ராலிக் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு சக்கரங்களிலும் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    2018 ஹோன்டா சிடி 110 டிரீம் டி.எக்ஸ். பிளாக் மற்றும் கேபின் கோல்டு, பிளாக் மற்றும் கிரீன் மெட்டாலிக், பிளாக் மற்றும் கிரே சில்வர் மெட்டாலிக், பிளாக் மற்றும் ரெட் மற்றும் பிளாக் மற்றும் புளு மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் 2018 ஹோன்டா சிடி 110 டிரீம் டி.எக்ஸ். விலை ரூ.48,641 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×