என் மலர்tooltip icon

    பைக்

    CD 110 Dream பைக் உற்பத்தியை நிறுத்திய ஹோண்டா நிறுவனம்
    X

    CD 110 Dream பைக் உற்பத்தியை நிறுத்திய ஹோண்டா நிறுவனம்

    • வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரிய அளவிலான வரவேற்பு இல்லாததால் நடவடிக்கை.
    • CD 110 Dream பைக் சுமார் ரூ.42,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் CD 110 Dream பைக் உற்பத்தியை இந்தியாவில் நிறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், இந்த மாடல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

    2014-ல் அறிமுகமான CD 110 Dream, 11 ஆண்டுகளாக இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் மலிவு விலையில் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருந்தது.

    இந்த மாடல் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணங்களாக, விற்பனை குறைவு மற்றும் 2023-ல் அறிமுகமான Honda Shine 100 போன்ற நவீன மாடல் பைக்குகளின் வரவு என கருதப்படுகிறது.

    SIAM தரவுகளின்படி, 2025 பிப்ரவரியில் ஒரே ஒரு CD 110 Dream மட்டுமே விற்பனையாகியதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் 33 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின, மற்றும் ஏப்ரல் 2025-ல் விற்பனை பூஜ்ஜியமாக இருந்துள்ளது.

    குறைந்த விற்பனை எண்ணிக்கை CD 110 Dream மாடலை நிறுத்துவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    ஹோண்டா CD 110 Dream 109.51சிசி ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது. இது முறையே 8.79 ஹெச்பி மற்றும் 9.30 என்எம் உச்ச சக்தி மற்றும் முறுக்குவிசை வெளியீட்டை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

    மேலும், உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க மோட்டார் சைக்கிள் பல முறை புதுப்பிக்கப்பட்டது. இந்த பைக் சுமார் ரூ.42,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது அப்போது நாட்டின் மிகவும் மலிவு விலை பைக்காக அமைந்தது.

    இருப்பினும், கடந்த 2023ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா ஷைன் 100 ஐ பைக், இதன் நவீன தோற்றம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது. இது வாடிக்கையாளர்களிடையே சிடி 110 டிரீம் பைக் வாங்குவதற்கான ஆர்வத்தை குறைத்துள்ளது.

    இதுகுறித்து கூறிய ஹோண்டா இந்தியாவின் தலைவர், "CD 110 Dream பைக், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை" என ஒப்புக்கொண்டதுடன், "விரைவில் புதிய குறைந்த விலை மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளதாக" தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×