search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர் அறிமுகம்
    X

    இந்தியாவில் ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர் அறிமுகம்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சூப்பர் ஸ்ப்லெண்டர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்ப்லெண்டர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2018 சூப்பர் ஸ்ப்லெண்டர் சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. 

    2018 ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவித கிராஃபிக்ஸ் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்ப்லெண்டர் இளைஞர்களை கவரும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய அப்கிரேடுகள் பர்ப்பிள், பிளாக், ரெட் பிளாக் மற்றும் சில்வர், கேண்டி பிளேசிங் ரெட் மற்றும் ஹெவி கிரே என ஐந்து வித நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    சூப்பர் ஸ்ப்லெண்டர் மாடலில் ஹீரோவின் புதிய ஏர்-கூல்டு, 124.77சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 11.2 பி.ஹெச்.பி. @ 7,500 ஆர்.பி.எம். மற்றும் 11 என்.ம். டார்கியூ @ 6,000 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. புதிய 2018 ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர் மாடலில் அவுட்புட் 1.87 பி.ஹெச்.பி. மற்றும் 0.65 என்.எம். வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.



    புதிய ஹீரோ கிளாமர் போன்றே 2018 சூப்பர் ஸ்ப்லெண்டர் மாடலிலும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் எடை 124 கிலோ ஆகும். இது தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை விட 3 கிலோ அதிகம் ஆகும். புதிய இன்ஜின் தவிர 2018 சூப்பர் ஸ்ப்லெண்டர் மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட சீட், முந்தைய மாடலை விட அகலமான மற்றும் வசதியான சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய சூப்பர் ஸ்ப்லெண்டர் மாடலின் பக்கவாட்டுகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் டெயில் பகுதி முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு, எல்இடி டெயில்-லைட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆல்-டைம் ஹெட்லேம்ப் ஆன், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர், அகலமான பின்புற டையர், பெரிய சீட் ஸ்டோரேஜ் மற்றும் யூடிலிட்டி பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இருக்கும் சூப்பர் ஸ்ப்லெண்டர் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர் 2018 விலை ரூ.57,190 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. 
    Next Story
    ×