search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கோப்பு படம்: பஜாஜ் பல்சர் 150
    X
    கோப்பு படம்: பஜாஜ் பல்சர் 150

    இணையத்தில் வெளியான 2018 பஜாஜ் பல்சர் 150 புகைப்படம்

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 பல்சர் 150 மோட்டார்சைக்கிள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஸ்பை படம் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 பல்சர் 150 விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 17 ஆண்டுகளாக விற்பனையாகி வரும் பல்சர் மோட்டார்சைக்கிள் நான்காம் தலைமுறை மாடலின் அப்டேட் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.  

    அந்த வகையில் 2018 பல்சர் 150 விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் நிலையில் புதிய ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. ஸ்பை புகைப்படங்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் வடிவமைப்பில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது. 

    அந்த வகையில் புதிய கிராஃபிக்ஸ், ஸ்ப்லிட் சீட் மற்றும் ஸ்ப்லிட் கிராப் ரெயில்கள் பல்சர் 180 மாடலை போன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று பல்சர் 180 எக்சாஸ்ட் மஃப்ளர் புதிய பிரஷ்டு மெட்டல் ஹீட் ஷீட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபூட் பெக் மற்றும் பெடல்களும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம்: நன்றி IAMBIKER.COM

    2018 பஜாஜ் பல்சர் 150 மாடலில் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் கேஸ்-சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கபப்ட்டுள்ளது. புதிய மாடலின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கபப்ட்டுள்ளதால், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்ட்ம வழங்கப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளிலும் 17 இன்ச் அலாய் வீல், அகலமான டையர்கள் வழங்கப்படுகிறது.

    பவர்டிரெயின் அம்சங்களை பொருத்த வரை 149சிசி சிங்கிள்-சிலிண்டர், 2-வால்வ், ட்வின்-ஸ்பார்க் மோட்டார் வழங்கப்படுகிறது. எனினும் புதிய மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் குறைந்தளவு அதிர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 13.8 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம்., 13.4 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள்கள் அறமுகமானாலும், பல்சர் விற்பனை சீராக நடைபெற்று வருகிறது. தலைமுறைகளை கடந்த வடிவைப்பு இன்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாடலாக இருக்கிறது. பல்சர் 150 விலை இந்தியாவில் ரூ.73,626 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் தற்போதைய மாடலை விட புதிய 2018 பல்சர் 150 விலை ரூ.1500 முதல் ரூ.2000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் புதிய 2018 பல்சர் 150 இந்தியாவில் ஹோன்டா சிபி யுனிகான் 150, ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மற்று்ம சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அபாச்சி RTR 1604V மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    Next Story
    ×